ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தாராளவாத சிந்தனைகளைக் கருவியாகப் பயன்படுத்துதல்

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

மதவாத, வகுப்புவாத சித்தாந்தத்திற்கு, தாராளவாத சிந்தனைகளுக்கும் இடையேயுள்ள அறிவார்ந்த மற்றும் அறநெறிசார்ந்த உறவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எப்போதுமே  புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது. இத்தகைய மதவாத சித்தாந்தமும், தாராளவாத சிந்தனைப் போக்குகளும் அறிவார்ந்தரீதியிலும் அறநெறிப்படியும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்படக்கூடியதே என்று வாதிடப்படுகிறது. ஒரு மதவாத . வகுப்புவாத நிலைப்பாட்டினால் சமூகத்தையோ அதேபோன்று அதன் இயல்பான ஒழுங்குமுறையையோ அறிவார்ந்தமுறையில் புரிந்துகொள்ள சக்தியற்றது என்றும் வாதிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வலதுசாரிகளின் அல்லது மதவாத நிலைப்பாட்டின் இத்தகைய அறிவுப்பற்றாக்குறையை அதனை உயர்த்திப்பிடிப்போர் மேற்கொண்டுவரும் நடைமுறைகளிலிருந்தும், அல்லது அவர்கள் சமூகம் குறித்துப் புரிந்துகொள்வதில், ஆழமான முறையில் ஆர்வமற்றிருப்பதிலிருந்தும் புரிந்துகொள்ள முடியும். இவர்களின் இத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக, சாதிகள் குறித்தும், சாதியப் பாகுபாடுகளுக்கான காரணங்கள் குறித்தும் இவ்வாறான  சமூகத்தின் எதார்த்த உண்மைகளைக் கண்டறிவதில் இவர்களுக்கு ஆர்வம் கிடையாது. அதேபோன்றே, தங்களின் நிலைப்பாட்டின் காரணமாக சமூகத்தை சமத்துவமிக்கதாக மாற்ற வேண்டும் என்கிற ஆர்வத்தைப் புரிந்துகொள்வதிலும் இவர்களுக்கு அக்கறை கிடையாது. இந்தப் பின்னணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டோமானால், மதவெறி நிலைப்பாடுகளுக்கும் தாராளவாத சிந்தனைகளுக்கும் இடையேயான தொடர்பினை வெளிக்கொணர்வது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.

இப்போது ஒருவரால் கேட்கப்பட வேண்டிய முன்னணிக் கேள்வி என்னவென்றால், இவ்வாறு மதவாத/வகுப்புவாத சித்தாந்தத்தின் நிலைப்பாடு, தாராளவாத சிந்தனையுடன் நிரந்தர விரோதம் பாராட்டுமா என்பதாகும். இந்தக் கேள்விக்கு சுதிப்தா கவிராஜ் தன்னுடைய “மதச்சார்பின்மையின் மொழிகள்” என்னும் கட்டுரையில் (எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, 14 டிசம்பர் 2013) விடையளித்திருக்கிறார். அக்கட்டுரை நுண்ணறிவு அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கி இருந்தது. கவிராஜ், “இந்திய அரசியலின் இரு தாராளவாத எதிர்ப்பு இழைகள் - இடதுசாரிகள் மற்றும் இந்து தேசியவாதிகள் - கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய விரோத மனப்பான்மையை இத்தகைய தாராளவாத சிந்தனைகளுக்கு விட்டுக்கொடுத்துக் குறைத்துக்கொண்டிருக்கின்றன என்றும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன,” என்றும் வாதிட்டிருக்கிறார்.  இத்தகைய முக்கிய கூர்நோக்கலை அடுத்து, ஒருவர் சமீப ஆண்டுகளில் இந்திய இடதுசாரிகள், அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தாராளவாத சிந்தனைகளை ஆதரிக்கும் போக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுவதற்கு ஊக்கம் பெற்றிருக்கின்றனர். ஆனால், இது இடதுசாரி புரட்சிகர போர்த்தந்திர உத்தி இரண்டு அடிகள் பின்னால் எடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுவதால், இது மிகவும் குறைந்த ஆர்வத்துடனான அறிவார்ந்த வளர்ச்சியாக இருக்கலாம்.

கவிராஜ், தன்னுடைய கட்டுரையில், படிப்போர் அனைவருக்கும் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மற்றுமொரு முக்கியமான பிரச்சனையை எழுப்புகிறார். அவர் கூறுகிறார்: “இந்து தேசியவாதம், இந்தப் புதிய விவேகமான பிரபஞ்சத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கிறது.” சாதி மற்றும் பிராந்திய அளவில், பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் மொழியில், ஒற்றுமைக்கு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள்களுடன் – போட்டிபோட்டு வெல்லக்கூடிய விதத்தில் புதிய சிந்தனைகளைக் கண்டறிய வேண்டி இருந்தது.” இந்து தேசியவாதிகள், பாகுபாடுகளுக்கு எதிராக இரண்டு முனையிலான போர்த்தந்திர உத்தியைப் பயன்படுத்தி, தங்கள் உரிமைகளை வரையறுத்திடவும், பாதுகாத்திடவும் கோரினார்கள். முதலாவதாக,  அவர்கள் இதனை முஸ்லீம் “அச்சுறுத்தல்” என வரையறுத்தார்கள். கவிராஜின் கூற்றுப்படி, நாட்டிலுள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் கல்விரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிற அப்பட்டமான நிலையில்  இது மிகவும் “புதிரான” ஒன்றாகும். இரண்டாவதாக, இந்து தேசியவாதிகள்,  இந்துக்களிலேயே கீழ்நிலையில் உள்ள சாதியினரும், குறிப்பாக தலித்துகளும் பாகுபாடுகளை எதிர்கொண்டுவருவதாகத் தங்கள் கூற்றுக்களை வெளிப்படுத்தினார்கள். கவிராஜ், இந்து தேசியவாதகளின் கூற்றை மேலும் எளிமைப்படுத்தும் விதத்தில், தலித்துகள் இடையேயிருக்கின்ற பாகுபாடுகள் நியாயப்படுத்தப்படுமானால், “தங்களுடையதும் நியாயமே” என்று கூறுவதாகக் குறிப்பிடுகிறார். தங்களுடைய உயர்ந்த பண்பாடற்ற திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தகைய நியாயப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ் தாராளவாத சிந்தனையாளர்களையும் அணிதிரட்ட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

இந்து தேசியவாதிகள் தலித்துகளுக்கும், கீழ் சாதியினருக்கும் குறைகள் இருப்பதுபோல் தங்கள் மீதும் முஸ்லீம் ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட வரலாற்றுரீதியான அநீதிகளால் தாங்களும் நியாயமான குறைகள் பெற்றிருப்பதாக, வாதிடத் தொடங்கியிருக்கிறார்கள்.   எனினும், கவிராஜ் கட்டி எழுப்பியுள்ள நுண்ணறிவானது, இவர்களின் இத்தகைய வரலாற்று அநீதி என்கிற கருத்தியலை அடித்துவீழ்த்த வேண்டியது அவசியமாகிறது. வரலாற்று அநீதி என்கிற அந்தக் கருத்தாக்கத்தையே வரலாற்றுரீதியாகப் பார்க்க வேண்டியது நமக்கு அவசியமாகும். இதன் பொருள் என்னவென்றால், முஸ்லீம் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, உயர்சாதி ஆட்சியாளர்களும்கூட, கீழ் சாதி சூத்திரர்கள் (இன்றைய காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) மற்றும் ஆதி சூத்திரர்கள்  (இன்றைய காலத்தில் தலித்துகள்) ஆகியவர்களுக்கும் எதிராக வரலாற்று ரீதியான அநீதி இழைத்திருப்பதற்கு சமமான அளவில் பொறுப்பாவார்கள். இவ்வாறு, வரலாற்றுரீதியான அநீதிகளை வரையறை செய்யும்போது, அநீதிகளின் வரலாறு குறித்து நமக்குக் கிடைத்திடும் அனைத்து விவரங்களையும் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவது அவசியமாகும். மேலும், வரலாற்றுரீதியான அநீதிகள் குறித்த தொடர்ச்சியான வாசிப்பு, ஏதாவது கொள்கைத் தலையீடு இத்தகைய வரலாற்று அநீதிகளை அகற்றக்கூடும் என நமக்குப் பரிந்துரைக்கிறது. ஆனாலும், தலித்துகள் மீது ஏவப்பட்டுள்ள வரலாற்றுரீதியான அநீதி இந்திய அரசங்கத்தால் பின்பற்றப்பட்ட பல கொள்கைகளின் மூலமாக அகற்றப்பட்டிருக்கிறது என்று எவராலாவது கூற முடியுமா?   இதன் பொருள் இந்தப் பாகுபாடுகளை ஏற்றுக்கொண்டிருப்பதுபோலவே தெரிகிறது, அல்லது வரலாற்று அநீதி வளைந்துகொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில், இந்துத்துவா சக்திகளுக்கு உண்மையில் தாராளமயத்தின் மொழி தேவையில்லை என்றே குறிப்பிடலாம். உண்மையில், அவர்களில் சிலர் தாராளமய சிந்தனைகளை மிகவும் ஆழமான முறையில் கண்டிக்கிறார்கள். இவர்களுக்கு, தாராளமய சிந்தனைகள், ஒருவிதமான ஆயுதமாக மாறியிருக்கிறது. அத்துடன் அவர்கள் இந்துத்துவா அணிகளில் சில இத்தகைய தாராளவாத சிந்தனைகளுக்கு அடிநாதமாக விளங்கி வடிவம் கொடுத்திடும் ஜனநாயகக் குரல்களை நசுக்கிட முயல்கின்றன.  இவ்வாறு இந்துத்துவா, தாராளவாத சிந்தனைகளைக் கருவியாகப் பயன்படுத்தும் விழுமியங்களைக்கூட பெற்றிருப்பதுபோலத் தெரியவில்லை.

 

Back to Top