ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

விளிம்புகளை பெரிதாக்குவதன் நன்மைகள்

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

தேர்தல் ஜனநயகத்தில் அரசியல் விளிம்புகளைப் பற்றி விவாதிப்பது புதிராக தோன்றலாம். கருத்தியல் காரணங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவாகவே எழுப்பப்படுகின்றன. இந்த கோணத்தில் பார்த்தால் இந்த விளிம்புகளுக்கான காரணங்கள் பொருத்தமற்றதாகத் தோன்றலாம்.  சுழல்முறை கொள்கை தனது செயல்பாட்டால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மையத்தில் உள்ளது. எனவே நிறுவனமாக்கப்பட்ட அதிகாரத்தில் தலைவர்களை  நிரந்தரமாக சுழற்சி முறையில் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய செயலூக்கத்தின் விளைவாக, அந்த விளிம்புகளில் உள்ளவர்கள் மையத்திற்கு உயர முடியும் மற்றும் உச்சியில் உள்ளவர்கள் ஏணியின் கீழே இறக்கப்பட முடியும். ஜனநாயகத்தின் தேர்தல் அம்சம் இந்த மாற்றத்தை விளைவிப்பதாக கருதப்படுகிறது. இதை வேறுவிதமாகக் கூறவேண்டுமென்றால், ஜனநாயகத்தின் வாழ்வில் உள்ள விளிம்புகள் எப்போதுமே நிலையானதாகவோ அல்லது உறைந்து போனதாகவோ இருக்காது. மையத்திற்கு நகரும் வகையில் அவற்றிற்கு நெகிழ்வுத்தன்மை உண்டு. இருப்பினும் இந்திய ஜனநாயகம் தனக்கே உரித்தான சில விளிம்புகளைப் பெற்றுள்ளது. இந்த விளிம்புகள் மையத்திற்கு  சீரற்ற உறவில் உள்ளன, வலுவாக மாறியுள்ளன, வரவிருக்கும் சில ஆண்டுகளில் நிலையாக அதிகாரத்தில் இருப்பதற்கு விரும்புகின்றன.

அரசியலில் உள்ள மையமானது பாரதீய ஜனதா கட்சியை சுற்றி வலம் வருகிறது. இந்தியாவில் அரசியல் உரையாடலை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. தற்கால அமைப்பில், எதிர்க்கட்சிகள் வெறும் எதிர்ப்பை தெரிவிக்கும் அம்சமாகவே மாறிவிட்டது என்ற உண்மையிலிருந்து இது தெரிகிறது. இந்த சூழ்நிலையில், சிறிய கட்சிகளும் விளிம்புகளில் உள்ள கட்சிகளும் இரண்டு வகையாக செயல்படுவதாக தோன்றுகிறது. இந்த வழிகள் வேறுபடுவதாகத் தோன்றுகின்றன, ஆனால் அவை ஒன்றுதான். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக உள்ள சிறிய அரசியல் கட்சிகள் மையத்துடன் நகர்வதற்கான அலுவலை ஏற்கெனவே அளித்துள்ளன. விளிம்புகள் சந்திக்கும் சில நெருக்கடியான விவகாரங்களிலும் பொதுவாக நாடு எதிர்நோக்கும் சில விவகாரங்களிலும்  தனித்துவமான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிக்கின்றன.  பிராந்திய அரசியலில் நிலைத்திருக்கவும்   தங்களது குறிப்பிட்ட ஆசைகளை பாதுகாக்கவும் விளிம்புகளின் பிரதிநிதியாக உள்ள அந்த கட்சிகள் மிகவும் கவனமான நிலைப்பாட்டை எடுப்பது போல் தோன்றுகிறது. மேசையை நன்றாகத் திருப்பி நாம் கேட்போம். உண்மையிலேயே இந்த கட்சிகள் விளிம்புகளில் உள்ளனவா?

ஜனநாயக அரசியலில் இவை விளிம்பில் இருக்கலாம், ஆனால் நிலையான அரசியலில் அவை மையத்தில் இருக்கவேண்டும். மையத்தில் இருக்கும் நன்மைகளை பி. ஆர். அம்பேத்கர் மற்றும் ஜோதிராவ் பூலே போன்ற மாபெரும் சிந்தனையாளர்களின் விளக்கத்தின் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சிந்தனையாளர்களின் அறிவுபூர்வமான வழிகாட்டுதலின் பின்னணியில்  விளிம்புநிலை மக்களின் அரசியல் சக்தியாக உள்ள இந்தக் கட்சிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளும் சிறந்த இடத்தில் உள்ளன. இதை வேறுவிதமாகக் கூறவேண்டுமென்றால், சமூகத்தின் செல்வந்தரான பிரிவுக்கு பூலே மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை. அவர்களின் அரசியல் ஒருங்கிணைத்தலின் உள்ளடக்கம் வளமாகவே இருந்தாலும், அவற்றிற்கு அயல் மகரந்தச் சேர்க்கை தேவைப்படுகிறது. தேர்தல் சொற்றொடர்களில் பார்த்தாலும்  விளிம்பிலிருந்து அரசியல் மையத்திற்கு நகர்வதற்கு இவை மிகவும் கட்டாயமான நிலைகள். தங்களது கருத்தியல் மையப்படி சிந்தனையில் படைப்பாற்றலுடனும் அரசியலில் மாற்றமும் உள்ள இந்தக் கட்சிகள் தங்கள் விளிம்புகளை விரிவாக்க தோற்றுள்ளன. இந்த மேலாதிக்க சக்திகள் எல்லாவிதமான தந்திரங்களையும் கையாண்டு, தங்களுக்கு எதிரான தடைகளை முறியடிக்கின்றன என்பது உண்மை. இந்தக் கட்சிகள் பிராந்திய அளவில் பொருத்தமாக இருப்பதற்கான காரணங்களை கண்டறிகின்றன என்பதும் உண்மை.

ஒடுக்கப்பட்ட மக்களை இந்தியா முழுவதும் ஒருங்கிணைப்பது அல்லது தேசிய அளவில் ஒருங்கிணைப்பது என்ற செங்குத்தான அளவிலுள்ள நகர்வை நோக்கிய முயற்சிகள்தான் விரிவாக்குதல் நடவடிக்கையாகும். ஆனால் விளிம்பு நிலை மக்களை ஒருங்கிணைப்பது படுக்கைவாட்டிலேயே நடக்கிறது. பல்வேறு விளிம்புநிலை சமூகக் குழுக்களை ஒருங்கிணைப்பதில் இந்த தலைவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். இத்தகைய தலைவர்களின் முயற்சிகள் விளிம்பிலிருந்து விளிம்புக்கு மாறுகின்றன. நாட்டின் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் பெருகும் ஒரே வகுப்பிற்குள்ளான குழுக்களும் வேறு வகுப்பினர்கள் ஒருங்கிணைந்த குழுக்களும் இந்த குறுகிய நோக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன.

விளிம்பிற்குள்ளேயே நிலைத்திருக்கும் சாத்தியமற்ற போக்கு வெளிப்புறத் திலிருந்து ஊக்குவிக்கப்பட்டு உள்புறத்திலிருந்து நீடித்துள்ளது. மேலாதிக்க அரசியலை திறமாக நடத்த மேலே உள்ள கட்சிகளால் இது முடுக்கிவிடப்படுகிறது. கடந்த காலத்திலும் தற்காலத்திலும் ஆளும் கட்சிகளின் மேலாதிக்க தேவையானது  தங்களது திட்டத்திற்குள் சாமர்த்தியமாக விளிம்புநிலை கட்சிகளை கொண்டுவர வைத்துள்ளது. தங்களது சொந்த அடையாளத்தை கட்டிக்காத்து விளிம்பு நிலை மக்களுடன் ஒருங்கிணைந்துள்ள அதே வேளையில் இந்தக்  கட்சியின் தலைவர்கள் மேலாதிக்க கட்சியுடன் இணைந்துள்ளார்கள். தங்களது சமூக அடையாளங்களை  தக்க வைத்துக்கொள்ள இந்த கட்சிகளுக்கு எப்போதுமே காரணம் உள்ளது. உண்மையான நேசத்துடன் இல்லை என்றாலும் பெயரளவிலாவது இவை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. சிறிய குழுக்களை சுருக்கி அதிகரித்து  வைத்துக்கொள்ளும் திறன் இல்லாமையையே இது காண்பிக்கிறது. இத்தகைய கட்சிகளின் உறுப்பினர்களை பெயரளவிலோ அல்லது பேச்சிற்காகவோ உள்ளடக்கவேண்டிய திறன் மேலாதிக்கத்திற்கு தேவைப்படுகிறது. மேலும், தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் சமரசம் செய்யப்படும் அரசியல் மேலாதிக்கத்தின் தர்க்கமானது விளிம்புகளில் உள்ள ஒவ்வொரு குரலையும்  ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறது. விளிம்புகளின்  சிந்தனை மற்றும் எண்ணிக்கையில்  இந்த கட்சிகளுக்கு போதுமான வசதிகள் உள்ளன என்பது நகை முரண்தான். ஆனால் மையத்தை நோக்கி நகரும் நிலையில் அவைகள் இல்லை.

Back to Top