வலுவான எதிர்க்கட்சிக்கான தீர்ப்பு
அதிகாரத்திற்கான கர்வத்தை சமூக முரண்பாடுகளை மீட்டுறுதி செய்வதன் மூலம் புதைக்க முடியும்
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
பாரதிய ஜனதா கட்சி வெல்லற்கரிய கட்சி என்ற கட்டுக்கதையை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் ஓட்டையாக்கியுள்ளன. அந்தக் கட்சியின் தலைவர்கள் கோரிய சீட்டுக்களின் எண்ணிக்கையின் வீச்சு தரைமட்டம் அளவுக்குத் தாழ்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டின் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து இந்த ஆண்டு வெற்றி பெற்ற சீட்டுக்களின் எண்ணிகை கீழே வந்துள்ளது. தானாகவே அரசமைப்பது என்ற அந்தக் கட்சியின் கனவு வெற்றுப் பகல் கனவானது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது ஆட்சிக்கு கூடுதல் பலத்துடன் வந்தபிறகு, இரட்டைத் தலைமையின் கீழ் செயல்படும் பாரதிய ஜனதா கட்சியை அசைக்க முடியாது என்ற எண்ணம் எழும்பியது. ஒரு பக்கத்தில், பொதுக் கருத்தியலை அது கட்டுப்படுத்துகிறது. மறுபக்கத்தில் அதிகார மையத்தின் சக்கரங்களை கட்டுப்படுத்துகிறது. எனினும், இந்தத் தேர்தல் முடிவுகள் ஜனநாயக அரசியலின் முதல் குறிக்கோளை அடிகோடிட்டுக் காட்டியுள்ளன. மக்களிடம் களைப்படையாமல் செல்வதன் மூலமும், அவர்களைச் சுற்றி பேரணிகள் நடத்துவது, அவர்களது நம்பிக்கையை பெறுவது ஆகியவற்றின் மூலமும் அசைக்க முடியாத சக்திகள் என்று தோன்றுவனவற்றிற்குக் கடிவாளம் இட முடியும். மகாராஷ்டிராவில் சரத் பவாரால் முடுக்கிவிடப்பட்ட எதிர்க்கட்சி பிரச்சாரத்தில் இத்தகைய முயற்சி வெளிப்படையாகத் தென்பட்டது. ஆளும் கட்சியின் அதிரடியான பிரச்சாரத்திற்கு சரத் பவார் மக்களை நேரடியாக சந்தித்ததின் மூலம் வலுவாக பதிலடி கொடுத்துள்ளார். கொட்டும் கன மழையிலும் அரசியல் எதிரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சதாராவில் பவார் நடத்திய பேரணி அவரது மனோபலத்தை செயற்பாட்டாளர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் காண்பித்தது. மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத் திற்கு அருகில் தனது பிரச்சாரத்தை அடிமட்டத்திற்கு பவார் கொண்டு சென்றார். ஆளும் கட்சியானது எதிர்க்கட்சி தலைவர்களை இலக்காக வைத்து, பெரும்பான்மையினரின் தேசியவாதம் மற்றும் அமைப்பு ரீதியான விவகாரங்களை நம்பியே பிரச்சாரம் செய்தது. எதிர்க்கட்சி இல்லாத பாரதம் என்ற திசையை நோக்கிய இலக்கினைப் புறக்கணித்து, மகாராஷ்டிர மற்றும் ஹரியானா மாநில வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளை பலப்படுத்தியுள்ளார்கள். ஆளும் கட்சி தங்கள் செயல்களுக்குப் பதில் சொல்லவைத்திடக்கூடிய விதத்தில், எதிர்க்கட்சி அரசியலை மேலும் உந்தித்தள்ளி இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த உறுதிப்பாடு தெரிந்திருந்தால், கடந்த இரண்டு மாதங்களாக நடந்த தீவிரமான பிரச்சாரம் நிலையான ஒன்றாக மாறியிருந்தால், அவர்களுக்கான முடிவுகள் சிறப்பாக இருந்திருக்கலாம்.
சரத் பவாருக்கு அமலாக்கத் துறை அறிவிப்பு அனுப்பியது, மகாராஷ்டிராவின் தேர்தல் பிரச்சாரத்தில் திருப்பு முனையை அளித்தது. முதலாவதாக, மராத்திய சமூகத்தை அது முடுக்கிவிட்டது. அதன் முக்கிய தலைவர்களுள் ஒருவர் எதிர்க்கட்சியாக உறுதியாக நின்றதால் அவர் இலக்காகக் கருதப்பட்டு முடுக்கிவிடப்பட்டார். மராத்திய சமூகத்தினர் ஒரே சார்பானவர்கள், ஒரே மாதிரியான வாக்கு வங்கியைக் கொண்டவர்கள் என்று விமர்சனங்கள் விதைக்கப்பட்டன. ஆனால் இந்த புரிந்துகொள்ளலுக்கு முரணான வழியில் அந்த சமூகம் வேறுவிதமாக வாக்களித்துள்ளது. மராத்தியத்தின் பலம்வாய்ந்த மனிதர் என்ற சொற்றொடர்கள் இருந்தபோதும் பவாரும் அவரது கட்சியினரும், அந்த சமூகத்தில் ஒரு பிரிவினரின் வாக்குகளைத்தான் பெற்றார்கள். இருப்பினும், மகாராஷ்டிராவின் சமூக, கலாச்சார வரலாறு மற்றும் அரசியல் பொருளாதாரத்தில் ஆழமாக வேரூன்றிய காரணங்களால், அவர் மராத்தியர்களின் மத்தியில் உடனடி அடையாளத்திற்கான உணர்வை ஏற்படுத்தினார். அமலாக்கத்துறை அறிவிப்பு அனுப்பிய பிறகு, பவாரின் போர்க்குணமிக்க பதிலடியாக, இந்த மராத்திய அடையாளமானது அரசியல் ரீதியாகவும் தேர்தல் ரீதியாகவும் முடுக்கிவிடப்பட்டது. எனினும் இது வெறும் உணர்வு பூர்வமான விவகாரம் மட்டுமல்ல. இப்படி இலக்காக கருதப்படுவது குறித்த உணர்வானது தனித்து விடப்பட்ட உணர்வுடன் இணைந்தது. இந்த அம்சம் விவசாயப் பிண்ணனி இல்லாத ஆளும் கட்சியினர் கிராமப்புற விவசாய விவகாரங்களை புறக்கணித்ததிலிருந்தும் மராத்தியர்களுக்கான இட ஒதுக்கீடுகளையும் டாங்கர்கள் போன்ற பிற விவசாய சமூகங்களின் இதே போன்ற கோரிக்கைகளையும் பாரபட்சமாக நிறைவேற்றியதிலிருந்தும், நிரூபணமானது. வாழ்க்கையின் அன்றாட தேவைகளுடன் போராடும்போது, ஆளும் கட்சியின் தலைமை வித்தியாசமான சமூக குணத்தை தொடர்ச்சியாக பின்னணியில் வைத்திருந்தது. இதனால் பேஷ்வா ஆட்சிக்கு எதிராக கோபப்பட முடிந்தது. எதிர்க்கட்சியின் பிரச்சாரத்தின் அதிர்வு ஒரே ஒரு எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்திடம் மட்டும் நிற்கவில்லை.
விரிவான குறுக்குவெட்டு சமூகத்தின் ஆதரவைப் பெற எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்தது கண்கூடாகத் தெரிந்தது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரச்சார தந்திரம் மற்றும் இடங்களை விநியோகித்தலில் இருந்து தெரிந்தது. மேற்கு மஹாராஷ்டிரத்திலும் மரத்வாடாவின் பகுதிகளிலும், வடக்கு மஹாராஷ்டிரா மற்றும் விதர்பா பகுதியிலும் இதற்கு சரியான பலன்கள் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரச்சாரகர்கள் மராத்தா சமூகத்தை மட்டுமல்ல, மாலி மற்றும் வஞ்சாரி போன்ற இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் சார்ந்தவர்கள். மேலும் மேற்கு மஹாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியானது இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து குறிப்பாக டாங்கர் சமூகத்திலிருந்து வேட்பாளர்களை மராத்திய தலைவர்களுக்கு எதிராக நிறுத்தி அவர்களுக்கு அதிகாரமளித்தது. மஹாராஷ்டிரத்தில் மகாராஜா சிவாஜியின் குறியீடு வாழும் குறியீடாக உள்ளது. அந்த மாநிலத்தில் பல்வேறு சமூகங்கள் நிறைந்த ஒரு சமூகக் கூட்டணியை மிகவும் சக்தியுடன் கட்டி எண்ணிக்கையில் அதிகமாக உள்ள சமூகத்தை மையமாக வைத்து செயல்தந்திரம் அமைக்கும் பழக்கம் உண்மையில் மகாராஜா சிவாஜியின் காலத்தில் தோன்றியது. அந்தக் காலத்தில் சூழப்பட்ட வசதியான அதிகாரங்களை எதிர்த்து இவர்கள் உருவானார்கள். இந்த வகையில் சமூகக் கூட்டணிகளை மறு அமைப்பு செய்யும் திறனை இந்த தேர்தல் முடிவுகள் வழங்கியுள்ளன. இது மாதவ் (மாலி-டாங்கர்-வஞ்ஜரி) ஆகிய இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பொறியியலை கடந்த முப்பது ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்திக்கொண்டிருந்தது. ஒரு பிராமண முதலமைச்சரின் தலைமையின் கீழ் இந்த மாதவ் கூட்டணியைக் கட்டுப்படுத்துவதில் இருந்த பதற்றங்கள் தேர்தலின் போது முன்னுக்கு வந்தன. பிற்படுத்தப்பட்டோரின் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் இருந்த அதிருப்தியை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பிரச்சாரத்திலிருந்து தெரிகிறது. மஹாராஷ்டிரத்தின் சங் பரிவாரத்தின் முக்கிய சமூகக் குணத்தின் மையத்தை எதிர்க்கட்சி தகர்த்துள்ளது. தற்போதுள்ள முதலமைச்சரின் தலைமையின் கீழ் உள்ள ஆளும்கட்சியின் செயல்பாடானது பல்வேறு சமூகக் குழுக்களுக்கு மத்தியில் இடைவெளியை ஒரு கட்டுப்பாடான முறையில் அதிகப்படுத்துவதில் அக்கறை காட்டியது. மேலும் மராத்திய சமுகத்தை இது தனிமைப்படுத்தியது. பரிவர்த்தனை முறையில் அனைத்து சமூகங்களிடமிருந்தும் ஆதரவைப் பெற முயன்றது. சமூக முரண்பாடுகளை இவ்வாறு தந்திரமாக மேலாண்மை செய்யமுயன்றபோது அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் இந்த மேலாண்மையின் வெற்றிடத்தை முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன. இந்த சமுக முரண்பாடுகளின் கனம் அவர்களை அச்சுறுத்தியுள்ளது.
இத்தகைய காரணிகள் குவிந்துபோனதை, எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை, ஆட்சியை இழக்க வைப்பதற்கான எதார்த்த சந்தர்ப்பமாக பார்த்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக மஹாராஷ்டிராவின் பெரும்பகுதியில் காங்கிரஸ் கட்சி இத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை. அந்தக் கட்சியின் அராஜகத்தாலும் திசையற்ற செயல்பாட்டாலும் அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. எனினும் தற்போது கிடைத்துள்ள தீர்ப்பினை வலுவானதொரு எதிர்க்கட்சியாக மாற்ற ஏற்றுக் கொண்டுள்ளது. மக்களை ஒன்று திரட்டி ஆளும் கூட்டணிக்கு அரசியல் நெருக்கடியை உருவாக்கும் வகையில் அவர்கள் செயலாற்றலாம். தற்போதுள்ள ஆளும் கூட்டணி ஏற்கெனவே நெருக்கடியில் துவங்கும் வேளையில் வரவிருக்கும் காலங்களில் இத்தகைய செயல்பாடுக்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கலாம்.