ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பெருநிறுவன வரி குறைப்பு: யார் சுமப்பது?

முதலீடுகளை புதுப்பித்தல் என்ற இது குறித்த கனவுலகம் தவறான இடத்தில்  வைக்கப்பட்டுள்ளது, இதற்கான சுமை மாநிலங்கள் மீது விழுகிறது

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இறுதியாக, பெரு நிறுவன வரிகள் குறைக்கப்பட்டதால், பொருளாதார மந்தம் உண்மை என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இது வெறும் வட்டவடிவ நகர்வு அல்ல. வெளிநாட்டு  மூலதன முதலீட்டாளர்களின் உயர் வருமானத்தின் சர்சார்ஜூகளை அப்படியே வைத்திருப்பது, ஒற்றை பிராண்டு சில்லரை வர்த்தகத்தின் மீதான முதலீடுகளை தாராளமயமாக்குவது, நிலக்கரி சுரங்கங்களின் மீதான வெளிநாட்டு முதலீட்டை 100 சதவீதமாக மாற்றுவது, பொதுத்துறை வங்கிகளை ஸ்திரமாக்குவது -  ஆகிய நடவடிக்கைகள் எடுத்தபோதும் சந்தை சீற்றத்துடனே இருந்தது. 2019 செப்டம்பர் 20 அன்று பெரு நிறுவன வரி விகிதங்களைக் குறைப்பதாக அறிவித்தவுடன் பங்குச் சந்தை குதூகலமானது.

வரி சீர்திருத்தத்திற்கான சிறந்த அணுகுமுறை வரியின் அடித்தளத்தை அதிகமாக்கி விகிதத்தை குறைப்பதாகும்.  குறிப்பாக பெரு நிறுவன வரிகளுக்கு இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் மூலதனத்திற்கு இலகுவான அடித்தள இயக்கம் உண்டு. சமமான தளத்தை நோக்கி, அதாவது குறைந்த வரி இருக்கும் இடத்தை நோக்கி எளிதில் நகரும். அந்தக் கருதுகோளின்படி, பல்வேறு வரிச் சலுகைகள் மற்றும் பெரு நிறுவன வரிக் குறைப்பு குறித்த செயல்தந்திரத்தை அரசு மிகவும் கவனமாக செயல்படுத்த வேண்டும். முந்தைய நிதி அமைச்சர் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இந்த வட்டி விகிதம் 25 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பானது அந்த செயல்தந்திர அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான். எனினும் அரசு மூலதன சூழலை புதுப்பிக்கும் அவசரத்தில் உள்ளது. வரிச் சலுகைகளைப் பயன்படுத்தாத கம்பெனிகளுக்கு நிபந்தனைகளின் பேரில் 22 சதவீத வரிவிதிக்க அரசு முடிவு செய்தது. இந்தத் தகுதி குறித்து முடிவெடுக்க பரிமாற்ற விவகாரங்கள் உள்ளன. சிறிய வணிகங்கள் மிகவும் அதிகமான தனிநபர் வருமான வரிகளை செலுத்துகின்றன. மேலும் வரி அடித்தளத்தை அகலப்படுத்துவதுதான் நோக்கம் எனில், குறைந்தபட்ச மாற்று வரி ஏன் 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது என்று தெரியவில்லை.

 வரி விலக்குகளை பரவல் செய்வதையும், பல்வேறுபட்ட குறிக்கோள்களுடன் வரிக்கொள்கையை கனமானதாக மாற்றுவதையும்  எந்த வரி பொருளாதார நிபுணரும் பரிந்துரைக்க மாட்டார்கள். தள்ளி வைக்கப்பட்ட வருவாய் மற்றும் இலக்கில்லா கவனச்சிதறல்களின் மூலம், வரி விலக்குகளின் விலை உயர்வாக இருக்கலாம், இந்தக் குறிக்கோளை அடைவதற்கான திறன் சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம். உண்மையில் பட்ஜெட்டில் தள்ளி வைக்கப்பட்ட வருவாய் குறித்த அறிக்கையானது பெரு நிறுவன வரிச் சலுகைகளைப் பெற்ற 28 பொருட்களை பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலில் முடக்கிவிடப்பட்ட தேய்மானம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள அலகுகளின் இலாபங்களை ஏற்றுமதி செய்வது, மின்சார விநியோகம் மற்றும் பகிர்மானம், கட்டமைப்பு வளர்ச்சி, தாது எண்ணெய்  அகழ்வாராய்ச்சி, தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களில் உருவாக்கப்பட்ட அலகுகள், உணவுப் பொருட்களை பதப்படுத்துதல் ஆகிய துறைகளும் இந்த 28 பொருட்கள் அடங்கிய பட்டியலில் அடக்கம். இதில் 2018-2019ஆம் ஆண்டில் முடுக்கிவிடப்பட்ட தேய்மானம் மட்டும் தள்ளிவைக்கப்பட்ட வருவாயில் 49 சதவீதமாக இருந்தது.

சந்தையில் அதிரடி உணர்வு தோன்றியதற்கு வரி வெட்டால் கிடைக்கும் இலாபங்கள் பெருமளவில் இருக்கும் என்ற தவறான நம்பிக்கை காரணமாகும். வரிவிலக்கிற்கு முன்னால், செஸ் மற்றும் சர்சார்ஜ் உள்ளிட்ட நியாயமான வரி விகிதம் 35 சதவீதமாக இருந்தது. 2017-18ல் இதன் திறனான விகிதம் 29.49 சதவீதம் குறைந்தது, பெரு நிறுவன வரி சேகரிப்பு ரூ.7,66,000 கோடியாக உள்ளது. குறைவான விகிதத்தினால் ஏற்படும் 22 சதவீதம் நஷ்டம் ரூ.1.12 இலட்சம் கோடியாக இருந்தது. புதிய கம்பெனிகளின் விகிதமானது 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, இவை இலாபம் ஈட்டும்வரை இந்த சலுகையை அனுபவிக்க முடியாது. 2019-20ஆம் ஆண்டுக்கான வரி கணிப்புகள் அளவு மீறிய கணிப்புகளாகும். உண்மையான நஷ்டம் குறைவாக இருக்கலாம், ஆனால் உண்மையான சேகரிப்பும் குறைவாக இருக்கும்.

வரி விதிப்பின் சுமை அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படுவது ஒரு நகை முரண். வரி குறைப்பு அடிப்படை விகிதத்தில்தானே தவிர, செஸ்களிலும் சர்சார்ஜ்களிலும் கிடையாது. தற்போதுள்ள விலக்கு சூத்திரத்தின்படி, மாநிலங்களுக்கான நஷ்டமானது ரூ.60,000 கோடியாக உள்ளது. மேலும் மத்திய அரசுக்கான நஷ்டம் ரூ.82,000 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் உயர் தள்ளுபடியானது ஏறத்தாழ ரூ.20,000 கோடியாக திரும்பக் கிடைக்கும். இதற்கு முரணாக, மாநிலங்களில் உள்ள நிதி சூழல் அடுத்த ஆண்டு சந்தேகமாக உள்ளது. ஏனெனில் மத்திய வரி சேகரிப்பில் மதிப்பீடு அதிகமாகக் கணக்கிடப்பட்டது, வரியை பிரித்தளிப்பதை கணிசமாக தேய்க்கும். இதனால் மாநிலங்கள் தங்கள் செலவினங்களை திட்டமிடாத வகையில் குறைக்க வேண்டியிருக்கும். கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் இருக்கும் மந்தமாகி வரும்   பொருளாதாரமானது பதிவுத்துறை மற்றும் பத்திரத்தாள்களின் மூலமாக கிடைக்கும் வருவாயைக் குறைக்கும். நுகர்வு வரிகளை பொருட்கள் மற்றும் சேவை வரி கவுன்சிலுக்கு சரண் செய்த பிறகு மிச்சமிருக்கும் ஒரே வருவாய் பத்திரப் பதிவின் மூலம் கிடைக்கும் வருவாய்தான்.

பெரு நிறுவன வரி விகிதக் குறைப்பு பொருளாதாரத்தை புதுப்பிக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த வரி விலக்கிற்கு உண்டாகும் சந்தை பதிலை பொருத்தல்லாமல், இந்த மாற்றம்   “V”  வடிவிலான மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதும் சந்தேகம்தான். முதலில் புதிய கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அவை இலாபம் ஈட்டும்போதுதான் செயல்படத் துவங்கும். இது புதிய முதலீடுகளை உருவாக்கும் அளவிற்கு பெரியதா என்று காண வேண்டும். இரண்டாவதாக, இந்த நாட்டில் உள்ள பிரச்சினை வலுவடைந்துள்ள தேவையாகும். விநியோகப் பக்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு முதலீட்டை புதுப்பிக்கும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தற்போதுள்ள சூழலில், அரசு தனது பணப்பையை கணிசமாக இலகுவாக்க வேண்டும். அப்போதுதான் தேவை அதிகரிக்கும். நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் உள்ள தடைகள் அதன் வழியில் வரும். நிதி அமைச்சர் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு உத்வேகம் அளிக்கிறார். ஆனால் அவைகள் தங்களது இலாபத்தின் பெரும்பகுதியை தவணையாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் மீண்டும் முதலீடு செய்ய அவர்களிடம் ஆதாரங்கள் இல்லை. அடுத்த சில மாதங்களில் கொள்கை சூழ்நிலை எவ்வாறு மாறவிருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Updated On : 8th Nov, 2019
Back to Top