ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஜனநாயகத்தின் சிறிய குரல்கள்

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

ஜனநாயகத்தின் சிறிய குரல்களுக்கான விவாதம் மூன்று காரணங்களுக்காக தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முதலில், சிறிய குரல்களின் விவாதம் நவீன ஜனநாயகக் கட்டமைப்புடன் முரண்படுவதாகப் பலருக்குத் தோன்றலாம். இது ஏனெனில், இதன் தேற்றம் சார்ந்த அழுத்தத்தில், வேறுபாடு இல்லாமல் அனைத்துக் குரல்களுக்குமான வெளிப்பாட்டில் சமத்துவத்திற்கான அடித்தளத்தை அளிக்கும். இப்படித்தான் அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நாம் புரிந்து கொள்கிறோம். இரண்டாவதாக, அரசு - மீண்டும் தேற்றத்தின் அடிப்படையிலான வரையரையில் - இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் சார்பாகவும் பேசுகிறது. இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் ஒருங்கிணைந்த குரல். இதுதான் அரசமைப்புச் சட்டம் சார்ந்த நிலை என்றால், ஜனநாயகத்தின் பொதுவாழ்வில் சிறிய அல்லது பெரிய குரல்கள் குறித்த கேள்வியை ஒருவர் எழுப்பவேண்டிய அவசியம் என்ன? இரண்டாவது காரணத்திற்கான அனுமானத்தின்படி, ஆளும்கட்சிதான் ஒவ்வொருவரின் குரலையும் வெளிப்படுத்துபவர் என்று அனுமானிக்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு வாக்களிக்காதவர்களும் அடங்குவர். இது சிறிய மற்றும் பெரிய குரல்களுக்கான வேறுபாட்டை நீக்கும். இறுதியாக, எதிர்க்கட்சிகளும் சமூக இயக்கங்களும் சிறிய குரல்களாக கோரும்போது, எதிர்க்கட்சியின் குரலில் இருந்து விடுதலையான குரலை நீக்க வேண்டிய தேவை அதற்கு உள்ளது. இருப்பினும் இந்திய ஜனநாயகத்தில் இந்தக் குரல்களின் சுதந்திரமான எதிரொலியை அதன் குரல் மற்றும் மௌன வடிவங்களில் நாம் காண்கிறோம்.

ஒவ்வொருவரையும் சமமான குரலில் ஊக்குவிக்க வேண்டும் என்ற ஜனநாயத்தின் உறுதிமொழி ஒரு பக்கம் இருக்கும்போது, ஜனநாயகத்தின் வாழ்வில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் இன்றியமையாதது ஆகும். பழங்குடியினர், தலித்துக்கள், சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்களின் குரல்கள் மிகவும் சிறியதாக உள்ளன. ஒரே மக்களின் ஒரே விதமான குரல் நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்காக பல்வேறு அரசுகளிலும் அதிகமாக ஒலித்திருக்கின்றன. இந்தக் குரல்கள் அவர்களது தீவிரம் மற்றும் அடிக்கடி வெளிப்படுத்துதல் காரணமாக எதிர்மறை உணர்வாகக் கருதப்படுகின்றன. இந்தக் குரல்களிடம் எந்தவிதமான காரணங்களும் இல்லாதவாறு இதன் துயரம் நீடித்தே காணப்படுகிறது. இப்படி வரையறுக்கப்பட்ட எதிர்மறை உணர்வுக்குள் ஓர் உள்ளார்ந்த காரணமும் உண்டு. பெரும்பான்மையினர் மற்றும் அரசின் தோல்வியின் விளைவாக அவை உருவாகும்.கருத்தியல் ரீதியாகக் காண்கையில் இவைதான் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் குரலுமாகும். இந்தக் குரல்கள் உணர்வுபூர்வமாக இல்லாவிட்டாலும் போதுமான அளவு கேட்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குரல்கள் ஜனநாயகத்திலிருந்து விலகுவதில்லை, ஆனால் அவர்களின் துயரத்தைத்தான் குறிக்கின்றன என்று நாம் உணர்வுபூர்வமாகக் குறிக்கவேண்டும். உண்மையில் அவர்கள் ஜனநாயகத்தை உயிரூட்டமாக வைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அவர்களை ஜனநாயகத்திற்கோ அரசுக்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் என்று விமர்சிப்பது சரியல்ல. வன்முறை, புறக்கணிப்பு, சாதீய வன்முறைகள் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைக் குறித்து இவை பேசுகின்றன. சுகாதாரம், நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் சந்தை ஆகியவற்றின் அமைப்பு ரீதியான தோல்வியால் பாதிக்கப்பட்டவர்களாக தாங்கள் மட்டும் ஏன் இருக்கவேண்டும் என்று அவர்களது குரல்கள் கேட்கின்றன. இத்தகைய கதை சொல்லும் குரல்கள் பெரும்பான்மை சமூகம் மற்றும் அரசின் முன்பு வலி மற்றும் கஷ்டப்படுதல் குறித்த தார்மீக கேள்விகளை முன்வைக்கின்றன. கீழ்ப்படியாமல் இருக்கிற மனிதர்கள் உட்பட, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதாபிமானத்திற்கான இடைவெளி உண்டு என்று கதை சொல்லும் குரல்கள் யூகத்தின் அடிப்படையில் செயலாற்றுகின்றன.

இதைப் போலவே சிறிய குரல்கள் அதன் கீச்சுத்தன்மையினால் காரணம் மிகுந்தவையாக தோன்றுகின்றன. உள்நாட்டு சீர்திருத்தங்கள் இந்தக் குரலுக்கு சற்று வலிமையை ஏற்படுத்துகின்றன. இடஒதுக்கீட்டு கோட்டாக்களில் வெளிப்படுத்தப்பட்ட வலிமையான குரல்களை இவை சுறுசுறுப்பாகக் கேட்கின்றன. காலப்போக்கில் பலவீனமடைந்த குரல்களை ஆதரிக்கும் பொறுப்பு தார்மீக ரீதியாக அரசுக்கு உள்ளது. முக்கிய எதிர்க்கட்சிகளும் அதன் உறுப்புக் கட்சிகளும் இந்த சிறிய குரல்களை கேட்பதற்குத் தோற்றுவிட்டன. இந்த சிறிய குரல்களின் பொது நோக்கிணை ஒருங்கிணைக்க முக்கிய எதிர்க்கட்சிகளும் அவற்றின் தோழமைக் கட்சிகளும் தோற்றுவிட்டன. இந்தக் கட்சிகளுக்கு ஆளும் கட்சிக்கு மாற்று அரசியல் கட்சியாக தங்களைக் காண்பித்துக் கொள்வதில்தான் கவனம் உள்ளது.

மாற்று அரசியல் சிறிய குரல்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். இந்த ஊக்கமானது அவ்வப்போது அவர்களுக்கு பேச்சளவில் ஆதரவு அளிப்பதாக இருக்கக்கூடாது, மாபெரும் சமூகத்திற்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு அவர்களுக்கு உண்மையாக உதவி அவர்கள் குரலை உயர்த்த உதவ வேண்டும். மாற்று அரசியல் ஒடுக்கப்பட்டவர்களின் அன்றாட போராட்டத்துடன் தொடர்புடையது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் மோசமாகும் நிலையில் உடனடி நிவாரணம் கோருகிறார்கள். இதற்காக, அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படும் பிரதிநிதிகளை அவர்கள் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுகிறவர்களை நம்ப முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் அவர்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வாக்குப் பெட்டியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட அவர்களது அரசியல் குரல் இந்த முறையை வலுப்படுத்துகிறது. இருப்பினும் இதன் பொருளின் மீது அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இந்த நாட்களில் சமூக, பாலின வேறுபாடுகள் இல்லாமல் இவை பணக்காரர்களை உருவாக்குகின்றன. அரசியலின் மாற்றுவழி கட்சித் தாவும் அரசியலை சிறிய குரலுக்கு பொருத்தமற்றதாக மாற்றுகிறது. காலப்போக்கில் இந்தக் குரல் ஒருங்கிணைந்த ஜனநாயகக் குரலுடன் இணையும்.

Back to Top