ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

கருவுறுதல் குறைவதும் மக்கள்தொகையில் இது தொடர்பான இலாபமும்

மக்கள்தொகை தொடர்பான இலாபத்தைப் பெற கருத்தொருமித்த கொள்கையை உருவாக்குதல் தற்போது காலத்தின் தேவை

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

மக்கள்தொகை தொடர்பான மாற்றங்கள் இரண்டு உள்ளடக்கங்களை கொண்டவை, ஒன்று கருவுறுதல் சார்ந்தது, மற்றொன்று இறப்பு விகிதத்தை மாற்றுதல். எந்த மக்கள்தொகையிலும் இது தொடர்பான இலாபத்தை முடிவு செய்வதில் கருவுறுதலுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒட்டுமொத்தக் கருவுறுதல் விகிதத்தில் நிலையான சரிவினை பெறுவது ஒரு பெண்ணின் குழந்தைப்பேற்று காலத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையை குறிக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சியை மட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக இது உள்ளது. இதன் விளைவாக இதில் பல்வேறு கொள்கை மாற்றங்கள் உள்ளன. உழைக்கும் வயதிலுள்ள மக்களின் பங்கும் அதிகரிக்கிறது. காலப்போக்கில் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதத்தில் உயர் கருவுறுதல் விகிதம் உள்ள மாநிலங்கள் கூட வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 2017ஆம் ஆண்டில் 22 முக்கிய மாநிலங்களில் இந்த விகிதமானது ஒரு பெண்ணுக்கு 2.2 என்ற அளவில் குறைந்துள்ளது. இருப்பினும், முடுக்கிவிடப்பட்ட பாலின விகிதத்தினால் தேவைப்படும் மாற்றக்கூடிய அளவிலான கருவுறுதல் அல்லது திறமையான மாற்றக்கூடிய அளவிலான கருவுறுதல் ஆகியவை நிலையான அளவுகோலான 2.1 என்ற விகிதத்தை விட உயர்வாக உள்ளது. மேலும் கருவுறுதல், இறப்பு விகிதம், வயது கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் மாநிலங்களுக்கு இடையிலும், கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளிலும் பல்வேறு மாற்றங்கள் உள்ளன. ஒட்டுமொத்தக் கருவுறுதல் விகிதத்திற்கு (Total fertility rate (TFR)) பங்களித்த காரணிகளில் அதிகரித்துள்ள நகரும் தன்மை, தாமதமாகும் திருமணம், உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் அதிகரித்தல், பெண்களுக்கு அதிக நிதி சுதந்திரம் கிடைத்தல் ஆகியவை அடங்கும்.

2017ஆம் ஆண்டுக்கான மாதிரி பதிவு அமைப்பின் (Sample Registration System (SRS)) தரவுகளின்படி கருவுறுதல் விகிதம் குறைந்ததற்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பல்வேறு முரண்பட்ட அம்சங்கள் செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்து வயதையொத்தக் குழுமங்களிலும் கருவுறுதல் விகிதம் இருக்கும்போதும், நகர்ப்புற இந்தியாவில் அதிகம் வயதுள்ள குழுக்களில் கருவுறுதல் விகிதம் அதிகரித்துள்ளது. 35 வயதிற்கு மேலுள்ள தாய்மார்களில் கருவுறுதல் விகிதம் கிராமப்புறங்களில் குறைந்துள்ளபோதும், இந்த வயதிற்கு மேல் உள்ள பெண்களின் கருவுறுதல் விகிதம் நகர்ப்புறங்களில் அதிகரித்துள்ளது. எனினும் ஒட்டுமொத்தக் கணிப்பின்படி பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. பெண்களுக்கு மத்தியில் உள்ள கருவுறுதல் விகிதத்தில் கல்விக்குப் பெரும் பங்கு உண்டு. பெரும்பாலும் நகர்ப்புறங்களில் உள்ள கல்வி கற்ற பெண்கள் மத்தியில் கருவுறுதல் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. 30களில் உள்ள கல்வி கற்ற பெண்களுக்கு, கல்லாத பெண்களைவிட கருவுறுதல் விகிதம் அதிகம் உள்ளது. ஏனெனில் கல்வி கற்ற பெண்களால் தங்கள் திருமணத்தையும் குழந்தைபேற்றையும் தள்ளிப்போட முடியும். சிறந்த சுகாதார வசதி அவர்களுக்கு கிடைக்கும், இதனால் அதிக வயதிலும் அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும், நகர்ப்புறங்களில் கருவுறுதல் விகிதம் எதிர்பார்த்ததை விட வேகமாகக் குறைகிறது. 2017ஆம் ஆண்டு நகர்ப்புற இந்தியாவின் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் 1.7 ஆகக்குறைந்து மாற்றக்கூடிய அளவைவிட குறைவாக இருந்தது. பீகார், இராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள நகர்ப்புற பகுதிகளின் கருவுறுதல் விகிதமானது மாற்றக்கூடிய அளவு அல்லது அதற்கும் கீழே உள்ளது. பத்து மாநிலங்களில் கிராமப்புற பகுதிகளில் இந்த ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதமானது இரண்டுக்கும் கீழே உள்ளது.

இந்தியாவில் உள்ள மக்கள்தொகை மாற்றமானது சீராக இல்லை என்று மக்கள்தொகை அளவீடுகள் குறிப்பிடுகின்றன. மக்கள்தொகை வளர்ச்சியானது குறைவாக இருந்தபோதும், உழைக்கும் வயதின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் இந்தியாவில் மக்கள்தொகை மாற்றத்தில் உள்ள நன்மைகளும் அதிகரித்துள்ளன. இதன் பொருள் என்னவென்றால், பொதுவான மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட உழைக்கும் மக்கள் கொண்  மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்பதுதான். பொதுவாக, மக்கள்தொகை குறித்த நன்மையானது 40லிருந்து 50 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதனைத் திறமையாக பயன்படுத்தினால் மட்டுமே நாடுகளால் பலன் காண முடியும். இல்லையெனில், மக்கள்தொகை இலாபமானது மக்கள்தொகை சுமையாக மாறும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான மக்கள்தொகை பரிமாணங்கள் தெளிவாக வேறுபட்டு இருக்கும். பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான வயது கட்டமைப்புகள் பல்வேறு காலங்களில் மாறுவதால் மக்கள்தொகை இலாபங்களும் மாறும். ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின்படி, தெற்கு மற்றும் மேற்கத்திய பகுதிகளில் மக்கள்தொகை தொடர்பான இலாபமானது அதிகரித்துவரும் வயது தொடர்பான மக்கள்தொகையினால் ஐந்து ஆண்டுகள் வரை நிறைவு பெறும். ஆனால் சில மாநிலங்களில் இது பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை இருக்கும். வடக்கு மாநிலங்களில் உள்ள உயர் கருவுறுதல் விகிதம் கொண்ட மாநிலங்களில், இதற்கான சாளரம் திறந்தே உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான மக்கள்தொகை மாற்றத்தில் உள்ள வேறுபட்ட மாதிரிகளால் மக்கள்தொகை தொடர்பான இலாபத்தின் நீண்ட வாழ்நிலையின் நன்மைகள் இந்தியாவிற்கு உண்டு.

மக்கள்தொகை இலாபத்தினால் ஏற்படும் சார்பு விகிதத்தில் உள்ள முன்னேற்றமானது வேலைக்கு செல்லும் வயதில் உள்ள மக்கள்தொகையில் வளர்ச்சியை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடும். கொள்கை வடிவமைப்பாளர்கள் மக்கள்தொகை இலாபத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக்கொள்ள மனிதவள மூலதனத்தை கட்டமைக்க சீரிய முயற்சி எடுக்கின்றனரா? அடிப்படைக் கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி பெறுதல், பணிபுரியும் தொழிலாளர்களின் திறன்களை உயர்த்துதல், அரும்பும் புதிய பணியாளர் சமூகத்திற்கு ஏற்றவகையில் போதிய வேலைவாய்ப்புக்களை அளித்தல் ஆகியவற்றில் போதிய மூலதனங்களை முதலீடு செய்தால் மக்கள்தொகையினால் பெறும் நன்மைகளின் இலாபங்களைப் பெறலாம். இது ஏனெனில் தற்போதுள்ள பணியாளர்கள் உயர் வளர்ச்சியை தானாகவே அளிக்க உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். மக்கள்தொகை இலாபத்தினால் ஏற்படும் நன்மையை ஊக்குவிக்க, உழைக்கும் வயதில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலாபகரமான வேலைவாய்ப்பை அளிப்பது அவசியம். பணிபுரிபவர்களுக்கு சரியான கல்வி மற்றும் திறன்கள் அளிக்கப்பட்டு அவர்களது பணியிடத்தில் அவர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட வழிவகுக்க வேண்டும். இதற்கு முரணாக, வேலையில்லா விகிதமானது 45 ஆண்டு உச்சமாக 6.1 சதவீதமாக உள்ளது. இருக்கும் வேலைவாய்ப்புக்கள் போதுமானதாக இல்லை என்று இதிலிருந்து தெரிகிறது. பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காததால் அவர்களது சுகாதாரம், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றில் பற்றாக்குறை உள்ளது என்றும் தெரிகிறது. இதனால் மக்கள்தொகை இலாபத்தினால் ஏற்படும் நன்மைகளை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

Back to Top