ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஒரே நேர தேர்தலும் பதில் சொல்லும் பொறுப்பும்

தேர்தல்கள் அரசினைத் தேர்ந்தெடுக்கும்  சாதனம் மட்டுமா அல்லது ஓர் அர்த்தமுள்ள ஜனநாயக நடைமுறையா?

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பாரதீய ஜனதா கட்சி முன்னுரிமை கொடுக்கும் விவகாரம் “ஒரே தேசம் ஒரே தேர்தல்”  என்ற விவாதமாகும். 19 ஜூன், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இத்தகைய விவாதத்திற்கு முன்னுரிமை அளித்து  பாஜக கூட்டம் நடத்தியதிலிருந்தே அந்த கட்சியின் எண்ணம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த கருத்தை வரையரை செய்ய பாஜக முயற்சித்தது.  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சில முக்கிய கட்சிகளும், வேறு சில பிராந்திய கட்சிகளும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வது போல தோன்றினாலும் சில எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்துள்ளன. அரசமைப்பு சட்ட ரீதியான ஜனநாயகம் மற்றும்  கூட்டாட்சிக் கொள்கையை இது கடுமையாக எதிர்க்கும் என்பது அவர்களின் வாதம். இத்தகைய நடவடிக்கை  ஆளும் கட்சியின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் என்று பலர் சந்தேகிக்கின்றனர். எனவே இதற்கு சரியான விவாதங்களும், கவனமான கருத்தியல் சிந்தனைகளும் அவசியம் தேவைப்படுகின்றன.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்ற கருத்து புதிது அல்ல என்றாலும், தேர்தல் ஆணையம் இந்த கருத்தை 1982ஆண்டும் சட்ட ஆணையம் 1999ஆம் ஆண்டும் வெளிப்படுத்தின. தற்போதைய அழுத்தம் சட்ட ஆணையம் அளித்த ஓர் அறிக்கையிலிருந்தும் நீத்தி ஆயோக் உறுப்பினர்கள் அளித்த ஒரு விவாத அறிக்கையிலிருந்தும் உத்வேகம் பெற்று எழும்பியுள்ளது. மேலும், இந்தக் கருத்தை பிரதமர் தனது உரைகளிலும் நேர்காணல்களிலும் அதிகமாக வெளிப்படுத்தி இந்தக் கருத்திற்கு அரசியல் அழுத்தம் கொடுத்துவருகிறார். அடிப்படையில் இந்தக் கருத்திற்கு பின்னால் உளள தர்க்கம்,  செலவுகள் மற்றும் திறமைகள் குறித்த விவாதங்களிலிருந்து தொடங்குகிறது.   ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஒட்டுமொத்த செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாக முறைப்படி குறையும் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு கால கட்டங்களில் நடத்தை விதிமுறைகளுக்கு ஒத்துப்போக வேண்டியுள்ளதால், அந்த நேரங்களில்  கொள்கை முடிவுகளை எடுக்க முடியவில்லை. இந்தத் தடைகளையும் ஒரே நேரத் தேர்தல்கள் தடுக்கும். இத்தகைய விவாதங்கள் உண்மையில் மேற்பார்வையானவை, ஆனால் அரசமைப்புச் சட்ட கொள்கைகளுக்கும் ஜனநாய மாண்புகளுக்கும் குறைவான மரியாதையையே அளிக்கின்றன.

இந்த கருத்து நிறைவேறினால் பல்வேறு மாநில சட்டமன்றங்களின் தற்போதைய ஆட்சிக்காலத்தை இது குறைக்கும். இதன் பொருள் என்னவென்றால் ஜனநாயக ரீதியான முடிவை குறைத்து மதிப்பிடுவதாகும். இந்த முறையை உறுதிசெய்தற்கு  அரசமைப்புச் சட்டம் 356ஐ பயன்படுத்தவில்லை என்றாலும் சமரசமாக எடுத்துச் சென்று நிறைவேற்றலாம். ஆனால் அவ்வாறு செய்வது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தாது, அப்பேதைய மத்திய அரசு தன் அதிகாரத்தை மீறி செயல்பட உதவினாலும் காலப்போக்கில்,  அரசியல் சக்திகள்  ஒருங்கிணைவதில் ஏற்பட்ட மாற்றத்தில் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த இது உதவியுள்ளது. மாநில அளவிலான விவகாரங்கள் மற்றும் பிராந்திய சக்திகளின் சிறப்பம்சங்கள்  இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டாலும், அந்த மாநில தேர்தல்களின்  கவனத்தை ஒருங்கிணைப்பதற்கான நம்பிக்கையையும் வெளியையும் இது அளித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்த சிறப்பம்சங்களை மூழ்கடிப்பது போல் அச்சுறுத்துகிறது. மையம் நோக்கிய பாரபட்சத்தை வலுப்படுத்தும். மக்களவை நடத்தப்படும் பொதுத் தேர்தல்களிலிருந்து தனியாக மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்துவதில் மைய அரசின் மீது ஜனநாயக ரீதியாக பல்வேறு அழுத்தங்கள் கிடைக்கும். மேலும், பல்வேறு சமயங்களில் நடத்தப்படும் தேர்தல்கள், மத்திய அரசு அப்போதைக்கப்போது மக்கள் விரோத கொள்கைகளை மாற்றிக்கொண்டு வெகுஜன மக்களின் தேவைகளுக்கு காது கொடுத்து கேட்கலாம்.

மேலும் ஒரே நேரதில் தேர்தல் நடத்துவதற்கான முன்மொழிதல்களை முன்னெடுத்துச்செல்லும்போது, இது அரசின் மூலம் மக்களுக்கு  நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்ற  கடமைக்கு முற்றிலும் மாறானது. ஏனெனில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நிலைக்கும்போது நிலையான ஆட்சிக் காலம் இருக்கவேண்டும். அத்தகு வழிமுறைகள் இல்லாமல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்னும் வழிமுறை உடையும். மத்திய அரசு அல்லது மாநில அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா  தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் இடைக்கால தேர்தலுக்கான தேவை ஏற்படும். இத்தகைய நிலையை ஆக்கபூர்வமான நம்பிக்கையில்லா தீர்மானம் (மாற்று ஏற்பாடு குறித்த சாத்தியங்களை நிரூபித்த பிறகே இதனை நகர்த்தலாம்), ஜனாதிபதி அட்சி, அல்லது வெட்டப்பட்ட காலத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்துதல் (இந்த ஆட்சிக்காலம் குறித்து நினைவூட்டுவது), போன்ற முன்மொழிகளின் மூலம் இத்தகைய சிக்கலை தீர்க்கலாம். ஆனால் இந்தக் கருத்துமே அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை. நிலையான ஆட்சிக் காலம் குறித்து பரிந்துரை செய்கையில் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மை மீது அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் தரத்தை (தற்போதுள்ள நிலைமையில்) நிலையில்லாமல் கெடுத்து பலிகொடுக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஆக்கபூர்வமான வாக்கு என்ற கருத்துக்கள்  சட்டமன்றத்தின் பொறுப்புணர்வை நீர்த்துப் போகச் செய்கின்றன.  ஒரு ஜனநாயத்தில் பொறுப்புணர்வை விட நிலைத்தன்மை முக்கியம் என்று முக்கியத்துவம் கொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது. தற்போதைய அரசியல் அதிபர்துவத்தை நோக்கி இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கான நடைமுறையுடன் இந்த நீர்த்துப் போதல் ஒட்டிக்கொண்டிருக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பெரிய தேசிய கட்சிகளுக்கு அதிகபட்ச நன்மையை அளிக்கும். இவர்களிடம் ஆதாரமும் மக்களை சென்றடையும் வாய்ப்பும் உள்ளதால், இந்த அரசியல் போட்டியானது இருமுனை போட்டியாகவும்  சில தலைவர்களின் ஆளுமையை மையமாக வைத்தும் நடைபெறும்.

மேலே குறிப்பிடப்பட்ட மேலாளர்  உபகரணம் கருத்தியல் அடிப்படையில், ஜனநாயகத்தின் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானது. பிரபல இறையான்மை என்ற கருத்தியலுடன் உள்ளது. இந்த கருத்தியல் தேர்தல்களை மக்களையும் தேசத்தையும் ஆள்வதற்கான அரசினை தேர்ந்தெடுக்கும் வெறும் நடைமுறையாகத்தான் பார்க்கிறது (மேலாளர்தனம் தீவிரமாக செல்லும்போது தேர்தல்கள் ஆட்சிக்கு குறைபாடாகவே கருதப்படும்).  மக்கள் மௌனமான வாக்காளர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்க வேண்டியவர்கள், அதன் பின் பொது நடவடிக்கையில் இருந்து பின்வாங்க வேண்டியவர்கள் என்றுதான் இது கருதும். அதன் பின் இதன் பொறுப்பு அதிகார மையத்திடம் ஒப்படைக்கப்படும். இராம் மனோகர் லோகியா, “சுறுசுறுப்பான மக்களால் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க முடியாது” என்று வாதிட்டார்.  நாடாளுமன்றம் தாண்டிய பிரபலமான போராட்டங்கள் மற்றும் இயக்கங்களுடன்,  பல்வேறு மாநிலங்களில் நடக்கும் தேர்தல்கள் இத்தகைய வெகுஜன நடவடிக்கைகளுக்கு  வாய்ப்பு அளிக்கிறது. ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு இதெல்லாம் அவசியம். உண்மையில் தேர்தல்கள் பிரபல இறையாண்மை என்னும் தத்துவத்தை செயல்படுத்தும் பயிற்சியாகும். பணம் மற்றும் ஊடகங்கள் ஆளும் தேர்தல்களில் இத்தகைய பிரபல நடவடிக்கைகள் எவ்வாறு சாத்தியம் என்று ஒருவர் விவாதிக்கலாம். ஆனால் ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற தத்துவத்தின் கீழ் அத்தகைய சாத்தியக்கூறுகள் கூட அழிக்கப்படுகின்றன.

Back to Top