ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

நம்பிக்கையிழக்கத் தேவையில்லை

தேர்தல் பின்னடைவை எதிர்கொள்ளும் போது நிலைமை மேலும் மோசமாகாதிருப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்ப்பது எப்படி?

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பாரதீய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) பெற்றுள்ள இந்த தேர்தல் வெற்றியானது அளவிலும் சரி, வாக்கு வித்தியாசத்திலும் சரி பிரம்மாண்டமானது. ஆனால் இதற்கு யாரும் உடனடி எதிர்வினை அல்லது அதி தீவிர எதிர்வினையாற்றக்கூடாது. ஏனெனில், அவ்வாறு செய்வது ஆழமான பகுப்பாய்விற்கு அதை உட்படுத்துவதை தடுத்துவிடும். அந்த மாதிரியான பகுப்பாய்வை அவசரகதியில் செய்ய முடியாது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மக்களாட்சியில் பங்குகொள்ளும் அனைவராலும் செய்யப்பட வேண்டிய பகுப்பாய்வு இது. தேர்தல் முடிவுகளை நிறுத்தி, நிதானமாக ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் ஆதரவாளர்கள் கட்டுக்கடங்காத கொண்டாட்டத்துடனும், எதிர்க்கட்சிகள் கணிசமாக நம்பிக்கை இழந்த நிலையிலும் இந்த முடிவுகளை பார்க்கின்றனர். இந்த வெற்றியை உருவாக்க தேஜகூ பயன்படுத்திய, அதன் வசமிருந்த மூலாதாரங்களை கணக்கில் கொண்டால் நியாயமாக நமது கவனம் எதிர்க்கட்சிகளை நம்பிக்கை இழந்த நிலைக்கு இட்டுச்சென்ற சூழல்கள் மீது குவிய வேண்டும். மக்களாட்சி உயிர்ப்புடன் இருக்க எதிர்க்கட்சிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் நெறி சார்ந்த காரணங்களுக்காக நமது கவனத்தை தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடிய நிலை மீது குவிக்க வேண்டும்.

 இந்த நம்பிக்கையிழந்த நிலை பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். எதிர்க்கட்சிக்களிடையே இந்த நம்பிக்கையிழந்த நிலையானது தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் போன்ற விமர்சனமாக, அதன் விளைவாக ஆலோசனை, பழிபோடுவது என்பதாக வெளிப்படுகிறது. பாரம்பரியமாக பாஜக வலுவாக உள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்துவதில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் முழுமையாக தோல்வியடைந்துவிட்டது என்பது உண்மையே. பாஜகவுடன் காங்கிரஸ் நேருக்கு நேராக மோதிய தொகுதிகளில் 2014 பொதுத் தேர்தலின்போது அது இழந்த தொகுதிகளின் எண்ணிக்கையை விட இந்த முறை அதிக தொகுதிகளை இழந்திருப்பதிலிருந்தே அது தெரிகிறது. தான் வலுவாக உள்ள பகுதிகளான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவையும், அமேதி போன்ற தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்பதைப் போலவே சமீபத்தில் நடந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் தான் பெற்ற வெற்றிகளை காங்கிரஸால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்பதும் மிகுந்த கவலைக்குரிய விஷயம். இந்த மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி மாற்று ஏதும் இல்லாத நிலையில் இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகிறது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாதது அதில் காங்கிரசின் பொறுப்பை விமர்சிக்க முடியும் என்றாலும் உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும் கூட்டணி கட்சிகளாலும் சமூகக் கூட்டணி ஒன்றை உருவாக்க முடியவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் நன்கு தெரிகிறது.

 மேலும், பாஜாவின் வெற்றிகளில் வடக்கு-தெற்கு இடையே காணப்படும் வேறுபாட்டை காட்டி திருப்திபட்டுக்கொள்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும். கர்நாடகாவில் பாஜாக பெரும் வெற்றி பெற்றது, மேற்கு வங்கத்திலும் தெலங்கானாவிலும் வலுவாக கால் பதித்திருப்பது இவ்வாறு திருப்திபட்டுக்கொள்வது தவறு என்பதைக் காட்டுகிறது. பாஜக மற்றும் தேஜகூ அல்லாத கட்சிகள் பெற்றுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஆறுதல் தேடிக்கொள்வது தவறானது. 31%த்தையும் 69%த்தையும் எதிரெதிராக நிறுத்துவது கடந்த ஐந்து ஆண்டுகளில் அடிக்கடி செய்யப்பட்டுவந்தது. இது வேட்பாளர்கள் மத்தியில் அதிக வாக்கு பெறுகிறவர் வென்றவர் என்ற தேர்தல் முறையின் யதார்த்தத்தை எதிர்கொள்ள மறுப்பதுடன் பாஜகவின் அரசியல் கதையாடலுக்கு கிடைத்துள்ள மக்கள் வரவேற்பையும் காணத் தவறுகிறது தங்களை ஆறுதல்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கூறும் காரணங்கள். இது பாஜவின் கதையாடலுக்கு எதிரான கதையாடலுக்கான மக்கள் ஆதரவை திரட்டுவதை விடுத்து அரசியலை கூட்டல், கழித்தல் விஷயமாக பார்க்கிறது.

  எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே கடுமையாக தாக்கிக்கொள்வது அல்லது அதற்கு நேரெதிராகச் சென்று பொதுமக்களின் பண்பு மீது இறுதித் தீர்ப்புகளை வழங்குவது என்ற போக்குகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே தாக்கிக்கொள்கிற போக்கு பாஜகவிற்காகவே கிடைத்துள்ள நேர்மறையான வாக்குகளின் அளவை கவனிக்கத் தவறுகிறது. 50% அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ள மாநிலங்களில், குறிப்பாக அது பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்தியாவின் மத்திய மாநிலங்களில் இது நன்கு தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் வழிமுறைகளின் மூலமோ அல்லது சங் பரிவாரத்தின் அரசியல் சித்தாந்தத்தை பயன்படுத்தியோ ஆளும் கட்சியாக வேண்டிய பாஜகவிற்கு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பாஜகவின் உள்நோக்கம் கொண்ட வழிமுறைகளுக்கு நேர்மறையான ஆதரவு கிடைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரமிருக்கிறது. ஆனால் இதை ஒப்புக்கொள்வதானது சங் பரிவாரத்தின் திட்டத்தில் மக்கள் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்று மக்கள் மீது பழிபோடுவதற்கு நம்மை இட்டுச்செல்லக்கூடாது. இத்தகைய பழிபோடும் தந்திரங்கள் அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகுவதை காட்டுவதுடன் ஆற்றலற்ற உண்மையின் புகழ்பாடுவதற்கும் இட்டுச்செல்லும் அபாயமிருக்கிறது. அரசியலில் பொதுமக்கள் என்பவர்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருப்பவர்கள் அல்ல, மாறாக அவர்களை தயார் செய்வதுதான் அரசியல் செய்வது என்பது. புதிய ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு எப்போதுமே இருந்ததில்லை என்பதால் பாஜக/தேஜகூவிற்கு வாக்களித்த பிரிவினர்கள் உட்பட அனைத்து மக்களையும் அவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களையும் எதிர்க்கட்சிகள் திரட்ட வேண்டும்.

பாஜகவின் திட்டங்கள் மற்றும் அதன் அரசியல் திட்டத்தின் சமூகப் பண்பை கருத்தில் கொள்கையில் அது கட்டியமைக்க விரும்பும் மக்கள் விருப்பம் இந்திய சமூகத்தில் ஏதோ ஒரு வடிவில் இருக்கிறது. அது உறுதியான வடிவத்தில் இல்லையென்றாலும் வடிவம் பெறாத ஒன்றாக இருக்கிறது. இந்த நிலை ஒப்பீட்டளவில் பாஜகவிற்கு நல்ல விளை நிலமாக இருக்கிறது. மறுபுறத்தில், நெறிசார்ந்த (நியாயம் மற்றும் இணக்கம் தொடர்பான கருத்துக்களை ஒட்டி) அரசியல் திட்டத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குவதற்கு அவை அதற்கான அரசியல் நிலத்தை பண்படுத்தியாக வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களுடைய இந்தப் பணியை செய்ய வேண்டுமெனில், தன்னுடைய நிலைபாடு முற்றிலும் சரி பிறர் அனைவரும் தவறு என்பதாக அவ்வப்போது பீறிட்டெழும் உணர்வு, சுய ஏமாற்று, அதீதமான சுயவிமர்சனம் ஆகியவற்றை மீறி வருவது என்பது முன் தேவையாகும்.

Back to Top