ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

நியாயத்திற்க்கான உரிமை

குடிமக்களின் உரிமைகளை மதிக்கும் அரசாங்க நிறுவனங்கள் வருமான மாற்றல் திறம்பட நடப்பதை உறுதி செய்யமுடியும்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

காங்கிரஸ் கட்சி அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதியான நாட்டிலுள்ள அதிகபட்ச ஏழ்மையான 20% குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டம் (நியாய்) பாராட்டிற்குரியது. ஏழைகளுக்கு பொருளாதார முகமையை உறுதி செய்யும் நலத் திட்டத்தை தொடர வேண்டியதன் அற முக்கியத்துவத்தை இது மைய அரங்கிற்கு கொண்டுவந்திருக்கிறது. ஆளும் அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் தனது நலத் திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை தனக்கு வேண்டிய வகையில் தெரிவு செய்த நிலையில், சமூகப் பாதுகாப்பு நலத் திட்டங்கள் கைவிடப்பட்ட பின்னணியில் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த சில நாட்களில், இந்த வாக்குறுதியின் நம்பகத்தன்மை பற்றிய விவாதமானது குறைந்தபட்ச வருமான உறுதியை ஓர் இலவசமாகக் கருதாது “பாதுகாப்பாக” கருதும் பொறுப்பு “சாதாரண மனிதன்” மீது சுமத்தப்படுவதற்கு மாறிவிட்டது. அரசியல் வாக்குறுதிகள் “சமூகப் பாதுகாப்பு” மற்றும் “இலவசங்கள்” இரண்டையும் ஒன்றுபோல் பாவிப்பது குறித்த கவலையும் பொதுமக்களின் மனதில் இருக்கிறது. கண்ணியமான வாழ்க்கை மற்றும் அரசமைப்புச்சட்டம் வழங்கும் குடிமக்களின் உரிமைகளை உறுதிசெய்யத் தவறும் ஓர் அரசாங்கத்தை, மக்களாட்சிரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதில் சொல்லும் பொறுப்பிற்கு ஆளாக்கும் முறையை இது நீர்த்துப்போகச்செய்கிறது. இவ்வாறு இந்த வாக்குறுதியை பார்ப்பது என்பது சமூகப் பாதுகாப்பு மற்றும் இலவசத்தின் அரசியல் முக்கியத்துவம் பற்றிய சாதாரண மனிதனின் சந்தேக புத்தியினுடைய அப்பாவித்தனத்தின் அல்லது பிறர் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள முடியாத தன்மையின் பிரதிபலிப்பா?

உறுதியோ, ஆதரவோ, இலவசமோ எதுவாக இருந்தாலும், இந்த வார்த்தகைகளில் (அரசின்) பெருந்தன்மையுடன் உதவுகிறோம் என்கிற தொனி பவேறு அளவுகளில் வெளிப்படுகிறது. அளிக்கப்படும் உதவிகள் அவற்றைப் பெறும் பயனாளிகளின் அடிப்படை வாழ்வாதார உரிமைகள் என்கிரபோது, பெருந்தன்மையாக உதவுவது என்கிற விஷயம் எந்த அளவிற்கு அற ரீதியாக ஏற்புடையது? அடிப்படை வாழ்க்கைக்கான வருமானத்தை அரசாங்கம் “உறுதிபடுத்துவது” என்பது ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை கணிசமாக உயர்த்துகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் துண்டு துண்டாக, மேலிருந்து கீழாக நிறுவனங்களால் அமல் செய்யப்படும்போது இவற்றை கட்சி சார்ந்த நோக்கங்களுடன் செய்ய முடியும் என்பதுடன் “உரிமைகள்” அல்லது செய்ய வேண்டிய கடமைகள் ஏதோ “பயன்கள்” அல்லது உதவி செய்கிறவர்களின் தயவு என்பதாக தோன்றும்படி செய்யப்படுகிறது. இலக்கு சார்ந்த பாதுகாப்பு நலத் திட்டங்கள் பற்றிய நமது முந்தைய அனுபவம் இதே போன்றுதான் இருந்திருக்கிறது. வறுமைக் குறைப்பின் பயன்கள் பிரம்மாண்டமாக இருப்பதற்கான சாத்தியத்தை இத் திட்டங்களின் அளவுக்கதிகமான அதிகாரவர்க்க, அலுவலக விதி முறைகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய சிறு திருட்டுகள் தடுத்துவிடுகின்றன. காங்கிரஸ் முன்மொழிந்துள்ள குறைந்தபட்ச வருமான உறுதியானது அனைவருக்குமானதல்ல, யார் யாருக்கு அளிக்கப்பட வேண்டுமென்ற “இலக்கு கொண்டது” என்பதால் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதில் இதன் திறன் குறித்து சந்தேகமிருக்கிறது. சேவைகள் அளிக்கப்படுவதன் நல்லதும் கெட்டதும் கலந்த வரலாற்றைப் பார்க்கையில் பாதுகாப்பு நலத் திட்டங்களை  (குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டம்) வெறும் “இலவசங்கள்” என்று பொதுமக்களின் பார்வையில் கீழிறங்குவது தவிர்க்கமுடியாத நிகழ்வாகும்.

 ”கோடோவிற்காக காத்திருப்பது” (இங்கு அச்சே தீன்களுக்காக, அதாவது நல்ல நாட்களுக்காக காத்திருப்பது) என்ற எப்போது நிகழுமென்று தெரியாத ஒன்றில் சிக்கியிருக்கும் இந்த நாட்களில் காங்கிரசின் நியாய் ஒரு சிறு நம்பிக்கையை அளிக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கை கோடோவை அழைத்துவரப்போவதில்லை. ஆனால் நிச்சயமாக இது தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு இது. குறைந்தபட்ச வருமான உறுதி குறித்த காங்கிரசின் தேர்தல் அறிக்கை முன்கூட்டி செய்யப்படும் தாக்குதல் அரசியலா அல்லது முன்னரே நிகழ்ந்த அரசியலா என்பதைப் பற்றி ஊகங்கள் செய்வதை விட அதன் நடைமுறை சாத்தியம் பற்றி விமர்சனபூர்வமாக பார்ப்பதே இப்போது முக்கியம். இலக்கு வைக்கப்பட்டுள்ள ஐந்து கோடி குடும்பங்கள் மற்றும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 72000 வருமான உதவி என்ற மதிப்பீடுகள் எதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன? இவ்வளவு பரந்த ஒரு திட்டத்திற்கான நிதிப் பற்றாக்குறையை 3%த்திற்குள் வைக்க முடியும் என்ற அனுமானத்திற்கான அடிப்படையைத் தரும் கணக்குகள் என்ன? இதற்கான செலவு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் எந்த வீதத்தில் பகிர்ந்துகொள்ளப்படும்? ஏற்கனவே நேரடியாக பண பரிமாற்றத்தை அமல்படுத்தியிருக்கும் ஆந்திர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்கள் ஏன் இந்த மாதிரியை அல்லது திட்டத்தை பின்பற்ற வேண்டும்? இந்த திட்டத்தை திறம்பட அமல் செய்வதை உறுதிபடுத்த நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் செய்யப்படுமா? கசிவும், திரிபும் கொண்ட வறுமை எதிர்ப்பு மற்றும் மானிய திட்டங்களை ஒழித்து இறுதியாக அந்த இடத்தை இந்தத் திட்டம் நிரப்புமா?

இத்தகைய விரிவான திட்டத்தை அமல்படுத்துகிறபோது பல்வேறு இடர்கள் ஏற்படுவது புரிந்துகொள்ளத்தக்கதே. இங்கு எழுப்பப்பட்ட கேள்விகளில் சிலவற்றிற்கு திட்டத்தை அமல்படுத்திய பிறகே விடைகள் கிடைக்கக்கூடும். இத்தகைய உயர்ந்த அறிக்கை வெறும் பெயர்சூட்டும் அரசியலாக மட்டுமாக இருந்துவிடாதிருப்பது வாக்காளர்களிடம்தான் இருக்கிறது. இந்த வாக்குறுதி சில பொருண்மையான முடிவுகளைத் தரக்கூடியதாக இருப்பதைப் பற்றிய உண்மையான சித்திரத்தை இந்தத் தேர்தல் அறிக்கை தரவேண்டியிருக்கும். இத்தகைய ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டால் பிரச்னைகளை தாங்கிக்கொள்வது என்பதன் எல்லையானது நெடுஞ்சாண்கிடையாக வீழ்வது என்கிற அளவிற்கு எடுத்துச்செல்லப்படாது என்பதை உறுதி செய்வதன் மூலம் தனது அரசியல் உறுதியை காட்ட வேண்டியது அந்த அரசியல் கட்சியின் பொறுப்பு. எனெனில் தாமதமாகும் நியாய் (நீதி) மறுக்கப்பட்ட நியாய். இரண்டிலுமே உரிய அனைத்து தளங்களிலும் மனப்போக்கில் அடிப்படையான மாற்றங்கள் வேண்டும். நீதியும் கண்ணியமும் உரிமைகளாகும், அவை உதவிகளோ, பலன்களோ அல்ல என்பதை சாதாரண மக்களும் சரி அரசாங்கமும் சரி (வரக்கூடியது அல்லது இப்போதிருப்பது) உணரவேண்டும். இரண்டு, உரிமைகளானது விருப்பப்பட்டு அளிக்கப்படுபவையோ அல்லது நம்பிக்கை இலக்குகளோ அல்ல அவை பயனாளிகளின் சட்டப்படியாக உரிமைகள்.  

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top