ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

கண்ணியக்குறைவிலிருந்தும் மரணத்திலிருந்தும் கைதிகளை விடுவியுங்கள்

சீர்திருந்துவதற்கும் மறுவாழ்விற்குமான வாய்ப்பை கைதிகளுக்கு குற்றவியல் நீதித்துறை அமைப்பு வழங்கக் கடமைப்பட்டுள்ளது.

 

சிறைக்காவலில் இருக்கும் போது ‘‘இயற்கையற்ற மரணத்தை’’ அடைந்தவர்களின் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென 15 செப்டம்பர் 2017 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைச்சாலைகள் இருக்கும் நிலை பற்றி சமீப காலத்தில் வந்த மிக முற்போக்கான தீர்ப்பு இது. சிறைக்காவலில் இருக்கும்போது நிகழும் மரணங்களின் வேதனையையும் பெயரளவில் மட்டும் இருக்கும் அரசாங்கத்தின் பங்கு பற்றியும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் தானாகவே முன்வந்து பொதுநல வழக்குகளை பதிவு செய்து இந்தப் பிரச்னையை அணுக வேண்டுமென உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. சிறைச்சாலை சீர்திருத்த செயற்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்டுள்ள இந்த உத்தரவு சிறைச்சாலைகளில் நடக்கும் இயற்கைக்கு மாறான மரணங்களைத் தடுப்பதற்கான, கைதிகள் தன்னைக் காணவருகிறவர்களை சந்திப்பதற்கான உரிமை, சட்ட மற்றும் மருத்துவ சேவைகள், நவீன சிறை விதிகளை அமல்படுத்துவது, கைதிகளின் உரிமைகளை மதிக்க சிறை அதிகாரிகளுக்கு கற்றுத்தருதல் ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை செய்திருப்பதுடன் திறந்தவெளி சிறைகளுக்கு ஒப்புதலையும் வழங்கியிருக்கிறது.

சிறைச்சாலை மரணங்கள் சிறை நிர்வாகத்தின் ஒரு பிரச்னை மட்டுமே என்ற கருத்தை ஒதுக்கித்தள்ளியிருப்பது இந்த செப்டம்பர் மாத தீர்ப்பின் சிறப்பு அம்சமாகும். சீர்திருத்துவது, மறுவாழ்வு அளிப்பது ஆகிய இலட்சியங்களை மறுதலித்திருப்பதன் நோய்க்குறியே இது என தீர்ப்பு இந்தப் பிரச்னையை அதன் பின்னணியில் வைத்து பார்த்திருக்கிறது. ஆனால் நமது குற்றவியல் நீதிமுறை அமைப்பானது  செய்த குற்றத்திற்கான தண்டனை மற்றும் குற்றங்களில் ஈடுபடாதிருக்கும் வகையில் பிறரை அச்சுறுத்துத்துவது ஆகிய கோட்பாடுகளை கடைபிடிக்கிறது. பல சிறைச்சாலை சித்திரவதைகள், மரணங்கள் காட்டுவதைப் போல சிறைக்கைதி தண்டனைக்கு ‘‘தகுதியானவர்’’ என்ற கருத்தே நிலவுகிறது.

Dear Reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Updated On : 15th Nov, 2017
Back to Top